நீலகிரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ந்தேதி தெரிய வரும். நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும். நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்தில் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்’. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘போலி சமூக நீதி பேசுபவர் தான் மு.க.ஸ்டாலின். பா.ஜ.க. சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்-மந்திரிகளாவும், முதல்-மந்திரிகளாகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். தி.மு.க.வில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3 பேர். கடைசி இடங்களில் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார்கள். நீலகிரியில் இந்த தேர்தலை 2 ஜியா, மோடி ஜியா என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal