அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

1-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை தொகுதிகளிலும், 2-ந்தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், 3-ந்தேதி மதுரை, திருச்சி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். 4-ந்தேதி மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகளிலும், 6-ந்தேதி கோயம்புத்தூர் தொகுதியிலும், 7-ந்தேதி வேலூர் தொகுதியிலும், 8-ந்தேதி திருச்சி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal