தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.  மதுரை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். மதுரையில் அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அதிமுக குறித்து அவதூறாக பேசுகின்றனர். அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. தமிழகத்தில் ஒரே அலைதான் வீசுகிறது – அது அதிமுக அலை. ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஓ.பன்னீர்செல்வம் பெயரில் தேர்தலில் நிற்கும் 5 பேருமே தகுதியானவர்கள் தான். அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி. அதிமுக-வுக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. மதுரையில் அதிமுக-தான் அமோக வெற்றி பெறும். 40  தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும் என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal