கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்தில் இன்று காலை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: ‘வரும் மக்களவை தேர்தல் வெற்றிக்கான தேர்தல் கிடையாது. நாட்டை மீட்டெடுக்கும் தேர்தல். நாட்டை மோடி சிதைத்து கொண்டிருக்கிறார். மக்களிடையே மதம் மற்றும் ஜாதி சண்டையை உருவாக்கி பாஜகவினர் குளிர் காய்கின்றனர். பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூரில் பிரச்னைகளை உருவாக்கி தீ வைத்து எரிந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து நிதி வாங்க கல்லிலிருந்து நார் பிரிப்பது போல் போராட வேண்டியுள்ளது. பாஜகவில் 40 எம்பிக்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களாக உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால் ஐடி, ஈடி மூலம் தண்டிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’, என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal