தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது. இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த பட்டியலை மத்திய தேர்தல் குழு பரிசீலிக்கும். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal