அரசு வழங்கும் நிவாரண தொகையை பிச்சை என்று விமர்சித்த நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானபடுத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் குஜராத்துக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவின் முகத்திரை கிழிந்து வருகிறது என தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.