பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது. அதில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதற்கட்டத்திலேயே ஒரே கட்டத்தில் தமிழ்நாடு உள்பட ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும். 3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.

4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது. 5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது. 6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal