அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என , சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், அதிமுக சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 2024 தேர்தலில் படிவம் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என தாம் அச்சப்படுவதாகவும், எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal