பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய
கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.

இந்த நிலையில் சீமானின் சின்னம் என்ன என்ற வாசகத்துடன் தேர்தல் ஆணையத்தை கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal