‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற வார்த்தைக்கு அன்புமணி ராமதாஸ் உடன் பட்டிருப்பதாகவும், இதனால் அ.தி.மு.க. & பா.ம.க. கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்கிறார்கள் தைலா புரத்து வட்டாரத்தில்!

இது பற்றி தைலாபுர தோட்டத்திற்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பா.ஜ.க. சார்பில் ஆரம்பத்தில் இருந்தே 7 ஆரம்பித்து பத்து தொகுதிகள் வரை பா.ம.க.விற்கு தர ஒப்புகொண்டிருக்கிறார்கள். ஆனால், ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என்பதை உறுதிபட சொல்லிவிட்டார்கள். தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து வாருங்கள், அதன் பிறகு அமைச்சர் பதவி பற்றி முடிவு செய்வோம் என்றும் பா.ஜ.க. மேலிடம் கூறிவிட்டது.

அன்புமணி ராமதாஸுக்கு பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி வைக்க அதிக விருப்பம். ஆனால், அவரது தந்தை டாக்டர் ராமதாஸ், ‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. நமக்கு சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம்’ என கூறியிருக்கிறார்.

ஆனாலும், மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதால், கூட்டணி தொடர்பாக பேச டெல்லி சென்றிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. ஆனாலும், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற வார்த்தையை அன்புமணியால் மறுக்க முடியவில்லையாம். எனவே, இன்னும் ஓரிருநாளில் ‘பா.ம.க. & அ.தி.மு.க. கூட்டணி’ அறிவுப்பு வெளியாகலாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal