பா.ஜ.க.வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் நேற்று இணைத்துள்ளார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறினார். மேலும், 16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன்.

என்னை பற்றி பா.ஜ.க. அறியும். 1996-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணிக்கு தன்னலமின்றி பிரசாரம் செய்தது போலவே தற்போதும் பிரசாரம் செய்வேன். பொறுப்பை எதிர்பார்த்து பா.ஜ.க.வில் சேரவில்லை. பா.ஜ.க. தலைமை சொல்லும் பணியை செய்வேன். நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal