நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்து முடிந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில்¢ பல தொகுதிகளிர் யார் யார் போட்டியிடுவது என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது. அந்த வகையில் மதுரை தொகுதியில் சிட்டிங் எம்.பி.,யான சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

கடந்த தேர்தலில்¢ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன் சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கு அ.தி.மு.க.வில் நடந்த உள்குத்தும் ஒரு காரணம் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மதுரையில் சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறும் வகையிலான ஒரு வேட்பாளரை அ.தி.மு.க. தலைமை தேடிக்கொண்டிருந்தபோது, டாக்டர் சரவணனை எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். காரணம், மதுரையைப் பொறுத்தளவில் ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு தேர்வானர். அதே போல், தனது மருத்துவ சேவையின் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் டாக்டர் சரவணன்! எனவே, டாக்டர் சரவணனை மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் எனக் கருதி, அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பது உறுதியாகிவிட்டது.

கடந்த திங்கட் கிழமை நடந்த நேர்காணலின் போது டாக்டர் சரவணன் மதுரையில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அவரிடம் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக நேர்காணல் நடத்தியது குறிப்பிடத் தக்கது.

கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த சு.வெங்கடேசன் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. காரணம், தொகுதி பக்கமே அப்போது எட்டிப் பார்க்காமல், தேர்தல் சமயத்தில் போது ‘லைம் லைட்’டிற்கு வந்திருக்கிறார். இதுவும் அ.தி.மு.க.விற்கு பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal