தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர் பட்டியலுடன் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது. 39 தொகுதிகிளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொண்டர்கள், மக்கள் கருத்துகளை தேசிய தலைமையிடம் தெரிவிக்க உள்ளோம். 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம். உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை தந்துள்ளோம்’ என்று கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal