மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018  டிசம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டுநிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதி தேவையான ரூ.1977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடி ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படுகிறது. சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் அங்கு நடைபெறாமல் இருந்தது.

கடந்த 2023 ஆகஸ்ட் 17-ந்தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பின் கட்டுமான பணிகள் இன்று தொடங்கின. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. எல் அண்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal