தமிழகத்தில் தற்போதை போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் தி.மு.க.விற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 33 மாத கால ஆட்சியில் தமிழக எந்த முன்னேற்றம் அடையவில்லை பின்னேற்றம் தான் அடைந்து வருகிறது ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி விட்டது என்று ஸ்டாலின் பேசினார். 

மக்களை வாட்டி வதைக்கும் வகையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இந்தியாவிலேயே கடன் சுமையில் தமிழகம் முதலிடம் தற்போது, போதை பொருளை கடத்தலில் தமிழக முதலிடமாக மாறிவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டு விட்டது என்று எடப்பாடியார் குற்றம் சாட்டினர் அதனை தொடர்ந்து 2023 சட்டமன்றத்திலும் பேசியபோது ஆதாரம் உள்ளதா என்று ஸ்டாலின் கேட்டார் அப்போது பேசிய ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறினார் எதையும் செய்யவில்லை

 தொடர்ந்து தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியானார்கள். அதற்கு ஸ்டாலின் 10 லட்சம் நிதி கொடுத்தார் இதில் வேடிக்கை என்னவென்றால் சாராயம் வியாபாரிக்கும் 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது சர்ச்சையான பிறகு திரும்ப பெறப்பட்டது

2023 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் 300 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பிடிபட்டது ஆனால் அதை உரம் என்று திசை திருப்பினர் .இதுவரை அரசின் சார்பில் கஞ்சா வேட்டையில் 47,976 கிலோ  பறிமுதல் செய்யப்பட்டு ஏறத்தாழ 25750 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது ஆனாலும் அதிகரித்து தான் வருகிறது ஆஸ்திரேலியா நாட்டில் போதை பொருள் நடமாடடம் அதிகரித்து வருகிறது இது எங்கிருந்து வருகிறது பார்த்தால் இந்தியாவில் இருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதற்கு மூல காரணமாக இருந்தவர் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் இதுவரை 15,000கோடி சம்பாதித்தாக குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது மதுரை ரயில்வே நிலையத்தில் 200 கோடி மதிப்பில் 30 கிலோ மெத்த பெட்டமை பிடிபட்டுள்ளது. எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் சட்ட ஒழங்கில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை இடத்தை பிடித்தது ஆனால், இன்றைக்கு போதை பொருட்கள் கடத்தில் இந்தியாவிலே தமிழக முதன்மை இடத்தை பிடித்தது இது தமிழ்நாடுக்கு கிடைத்த அவமானம் ஆகும் இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal