அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் கேட்ட தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பாஜக முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்றுசந்தித்து பேசினார்.

அப்போது, இருவரும் கூட்டணி மற்றும் தொகுதி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணையவுள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சியும் இணைவது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal