தமிழக அரசியல் களத்தில் அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் களத்தைத்தாண்டி தேசிய அரசியலிலும் கோலோச்சியவர்தான் மறைந்த முதல்வர் கலைஞர்.

கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறதார்.

இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் கலைஞரின் நினைவலைகளை நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! அவர் தனது வலைதளப்பக்கத்தில்,

‘‘நீக்கமற நிறைந்திருக்கும் என் உள்ளத்தின்
நவீன தமிழ்நாட்டின் தந்தையே!

நிவீர் உறங்கும் இடத்தில் திறப்புவிழா
நின்னை மறவாது தமிழினம்
பிறகு எதற்கு நினைவிடம்?

சுயமரியாதை , இறையாண்மை , சமூகநிதி
மறந்தவர்களுக்கு
சமத்துவம் , மனிதம் மறந்தவர்களுக்கு
மறவாதவர்கள், மறந்தவர்கள், மறையாதவர்களின் உணர்ந்திட
நின் நினைவிடம் ஒரு போதிமரம்!

மக்களின் முதல்வருடன்
தமிழனத் தலைவனை கொண்டாடுவோம்
வங்கக்கடலோரம்..!

நின்னை சரணடைந்த
பூங்கோதை ஆலடி அருணா…’’

என்று தமது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை அலடி அருணா..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal