கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார். சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார். இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:- “இவ்வளவு காலமாக பாஜக அரசுக்கு எதிராக பேசிய விஜயதாரணிக்கு இன்னைக்கு என்ன பாஜக மீது பாசம், விஜயதாரணியால் கட்சிக்கும் பயனில்லை, நாட்டுக்கும் பயனில்லை.. பாஜகவிலாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.