தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர்
துரைமுருகன் பதில் அளித்தார். அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். “காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே” என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:  காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை. காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal