சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆலந்தூர் தொகுதி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கூட்ட அரங்கில் யூ-இமேஜின், தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் துவக்க விழா நாளை (23-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப கருத் தரங்கத்தை துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மெண்ட் அண்ணாசிலை அருகில் நாளை காலை 9 மணியளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இக்கருத்தரங்கினை துவக்கி வைக்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டோன்மெண்ட் பட்ரோடு, அண்ணாசாலை அருகில் மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட-மாநகர-பகுதி-ஒன்றிய-நகர-பேரூர்-கழக நிர்வாகிகள்-தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.