முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal