தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே முதல் வேலை என்று குறிப்பிட்டுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் மட்டும் தான். கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளுக்கும் அதிகாரம் வழங்கி அவர்களை உயர்த்தி வருவது காங்கிரஸ். இப்போது தமிழகத்துக்கு எனக்கு தலைவர் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். அகில இந்திய தலைவராக இருக்கும் கார்கேவும் தலித் சமூகத்தை சேர்ந்தவர். எனவே எல்லா கட்சிகளில் இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களும் காங்கிரஸ் பக்கம் ஓடி வாருங்கள்.
தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி என்பது செயற்கை தனமாக மிகைப்படுத்துவது. அந்த கட்சியால் வளர முடியாது. குற்றப் பின்னணி கொண்டவர்களை எல்லாம் அவர்கள் கட்சியில் சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்ன லாபம்? பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம். எங்கள் கட்சியில் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்கு எதிராகவே புகார் செய்தவர்களும் உண்டு. அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது அனைவரும் அனைவரும் இணைந்து கட்சியை பலப்படுத்துவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.