நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க.வில் யாருக்கு சீட் என்ற ரேஸ் முடிந்து விருப்ப மனு பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் பார் இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அயலக அணிச் செயலாளர் முத்துவேல் ராமசாமி, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் தி.மு.க. சார்பில் களத்தில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. சார்பில் பரமத்திவேலூர் தமிழ்மணி, ஸ்ரீதேவி மோகன், ஒப்பந்ததாரர் டி.எஸ்.டி.தென்னரசு உள்ளிட்டோர் களத்தில் நின்றாலும், தங்கமணியின் கரிசனம் யாருக்கு இருக்கிறதோ அவர்தான் வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

ஆக மொத்தத்தில் ‘முட்டை’ மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal