தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் பேச தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை கேரள பாணியில் 2  நிமிடத்தில் முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது, ‘உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன். தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை  வைத்திருந்தேன்.

அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை’ என்றார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கியதும்  சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும். கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது. கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் தமிழ்நாடு சட்டசபையின் மரபு. கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாண்புடன் அவை நடத்துவதுதான் மரபு. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal