சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார். கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார். சபாநாயகர் மரபை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார். பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.

கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார். கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார் தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை. சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal