முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் அவர் மாயமானார்.

இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் அவர் பயணித்த கார் கவிழ்ந்துள்ளது. இதில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமி மாயமாகி உள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து சைதை துரைசாமியின் குடும்பத்தினர் இமாச்சல் விரைந்துள்ளனர். வெற்றி துரைசாமி புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இன்ஸ்டா பதிவுகள் முழுவதும் இயற்கையின் அழகு நிறைந்துள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal