நடிகர் விஜய் “விஜய் மக்கள் இயக்கம்” மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal