சேலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ‘ திராவிட இயக்கத்தின் எதிர்காலமும், தமிழகத்தின் வருங்காலமுமான’ உதயநிதியின் சரித்திர சாதனையை மேடையில் ஒலித்தார் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல்.

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் கவிதை நடையில் பேசியது இதோ….

‘‘இந்திய அரசியல் அரங்கில் அனைத்து திசைகளின் விழிகளும், பார்வைகளும்.. திரும்பிப் பார்க்க..

இது சேலம் கல்வராயன் மலையின் அடிவாரமா… இல்லை கடல் அலையின் ஆர்ப்பரிப்பா என்று… திகைப்பூட்டுகிற வகையில் நடைப் பெற்று… கொண்டிருக்கிற இரண்டாவது இளைஞரணி மாநாட்டில் எழுச்சி பேருறை நிகழ்த்த வருகை தந்து இருக்கின்ற கழகத்தின் இமயம்… கண்ணை இமைக்காப்பது போல் தமிழ் மண்ணைக் காக்கும் மகத்தான தலைவர்…

எல்லோரும் எல்லாம் பெற
என்னாலும் உழைத்திடும்
தன்னிகரில்லா முதல்வர்…

ஒலி படைத்த கண்
வளி படைத்த தோல்
உறுதி கொண்ட மார்பு…
உரிமை முழக்கம் விடும் மாண்பு…
எதிரிகளை நடுங்கச் செய்யும்
ஏறுபோன்ற நடை
சிறுமைக்கண்டு குமுறும்
சிங்கத்தின் கர்ஜனை…

உலகெங்கும் வாழ்கிற
ஒட்டுமொத்த தமிழர்களின்
இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற
ஒப்பற்ற தலைவர்…

திக்கெட்டும் புகழ் மணக்கும்
திராவிட பேரரசர்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே…

இன்று சரித்திர சாதனை படைத்து கொண்டிருக்கிற மாநில உரிமை மீட்பு மாநாட்டின் தலைவர்/கோபாலபுரம் குகையில் இருந்து புறப்பட்ட கொள்கை சிங்கம்…

பகைக் குன்றை பந்தாட
பாசறை களம் காணும்
எங்கள் ராணுவ தலைவர்…

இளைஞர்களின் நெஞ்சத்தில்
இலட்சிய நெருப்பை பற்றவைக்கும்
வரிப்புலி பட்டாளத்தின்
வரலாற்று நாயகன்

இந்த இயக்கத்திற்கு அரணாகவும், எதிரிகளுக்கு அனலாகவும், இளைஞர் அணிக்கு நிழலாகவும்,தரணி போற்றும் என் தலைவர் கரங்களிலேயே சுழலுகின்ற போர்வாளாகவும்…

புதிய சரித்திரம் தீட்டுவதற்கு
புரப்பட்டு இருக்கின்ற இந்தியாவின் இரும்பு இளைஞர்… திசைகள் வணங்கும் திராவிட ஏவுகணை…

இமைப்பொழுதும் என்னை இயக்கி வரும் தமிழகத்தின் இளம் தலைவர் என் ஆருயிர் அண்ணன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களே…

எங்கள் அண்ணன் ஆனையிட்டால்… எங்கள் அண்ணன் கண் ஜாடை காட்டினால்..சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்து சின்னாபின்னமாக்கும் ஆற்றல் படைத்த இளைஞர் அணியின் மாவட்ட மாநகர அமைப்பாளர்களே… துணை அமைப்பாளர்களே…

எந்த பிரதிபலனையும் எதிர்பாராது, எந்த பதவியும் இன்றி… இளம் தலைவரின் அன்புக் கட்டளையை ஏற்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை லட்சக்கணக்கில் திரண்டு இருக்கிற இலட்சிய வீரர்களின் கூட்டம்தான் இந்த கூட்டம்…

இது, பகைவர்களை கண்டு பதுங்குகிற கூட்டம் அல்ல பகை குன்றை பந்தாடுகிற வேங்கைகளின் கூட்டம்… இது எதிர்களை கண்டு அஞ்சுகிற கூட்டம் அல்ல…

வானமே இடிந்து வீழினும் எக்கு இதயத்தோடு… எதிரிகளை எங்கே எங்கே என்று தேடுகிற கூட்டம்… இது, துப்பாக்கியை கண்டு ஓடுகிற கூட்டம் அல்ல… துப்பாக்கி தோட்டாவுக்கு மார்பு காட்டுகிற வீர மறவர்களின் கூட்டம் தான் இந்த கூட்டமென்றுவெற்றி முரசு கொட்டுகிற இளைஞர்கள் பட்டாளத்தின் ராணுவ வீரர்களே…

பாசத்திற்குரிய பத்திரிக்கையாளர்களே… ஊடகத்துறை சார்நதவர்களே… உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்!

இளைஞர்களை ஈர்க்கின்ற கழகத்தின் காந்தமாய் ஆளுமையின் சிகரமாய், இருப்பவர் தான்நம் இளம் தலைவர் அவர்கள்… அவர்தான் நாளைய தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்..

யார் எங்கள் இளம் தலைவர்…

அமித்ஷா கூட்டத்திற்க்கும், அடிமை கூட்டத்திற்கும் முடிவுரை எழுதுவதற்க்கு, மாவட்டம் தோறும் ஒருநாள் கூட ஓய்வின்றிசண்ட மாறுத புயலாய் சுழன்று கொண்டிருக்கிறாறே,அவர்தான் எங்கள் இளம் தலைவர்…

யார் எங்கள் இளம் தலைவர்…
நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன்…அமைச்சர் பதவி எனக்கு பெரிதல்ல என்றுவள்ளுவர் கோட்டம் முற்றத்தில் நடைபெற்றஉண்ணா விரத அறப்போர் களத்தில்கனல் தெறிக்கும் வார்த்தைகளால் கண்டன முழக்கமிட்டு…இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தாரே அவர்தான் எங்கள் இளம் தலைவர்

யார் எங்கள் இளம் தலைவர்…
அச்சம் என்ற வாசகத்தின் நிழல் கூட உலகத்தில் எந்த தலைவனை தொடுவதற்கு அஞ்சுகிறதோஅவர் தான் எங்கள் இளம் தலைவர்….

யார் எங்கள் இளம் தலைவர்
புயலும்… பேய் மழையும் இணைந்து சென்னையை புரட்டிப்போட்ட போது, ஒரு நொடி கூட தூங்காமல் மக்களோடு மக்களாககளத்திலே நின்று கருணைக் கரம் நீட்டினாரே, அவர்தான் எங்கள் இளம் தலைவர்

யார் எங்கள் இளம் தலைவர்…
எந்தப் பெயரை உச்சரித்தால்வாலிபர்களின் உள்ளங்களில் வீரம் பிறக்கிறதோ…எந்த பெயரை உச்சரித்தால் இளைஞர்களின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்கிறதோ…அந்த பெயருக்கு சொந்தக்காரர்நான் எங்கள் இளம் தலைவர்…

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எதிரிகள் நெருங்க முடியாத ஒரு எஃகு கோட்டை… இதை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது…

ஆனால் சில அரசியல் அனாதைகள்தினமும் தங்கள் இறுப்பை காட்டி கொள்ள ஊடகங்களில் உளறுகிறார்கள்… நான் அவர்களுக்கு சொல்வேன் நீங்கள் எல்லாம்நெருப்பாற்றில் நீந்தி, தியாகத் தழும்புகளால் உருவான என் தலைவரின் கால் தூசுக்கு சமம்…

உங்களையெல்லாம் கண் அசைவில் களமாடி வெற்றிக் கணியை தட்டி பறிப்பதற்க்கு, துடிப்பு மிக்க எங்கள் அண்ணன் இருக்கிறார். துர்கா அன்னை பெற்றெடுத்த மாமன்னன் இருக்கிறார்…என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

புலி 8 அடி பாய்ந்தால் புலிக்குட்டி 16 அடி பாயும் என்பதை டெல்லிக்கே புரிய வைத்து புகழ் கொடிநாட்டியவர்தான் எங்கள் அண்ணன் அவர்கள்…

நாளைய தமிழகத்தின் ஒரே நம்பிக்கை, இளைய தலைமுறையின் ஒரே பாதுகாப்பு, இந்த கோபாலபுரத்து கோமகன்தான், இந்த கோபாலபுறத்து மா வீரன்தான் இதோ மேடையிலே அமர்ந்திருக்கிறார்ரே நம் இளம் தலைவர்தான்,

இதுதான் சத்தியம்… இதுதான் சாத்தியம்…
இளம் தலைவர் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா,
தரணியை நீ வெல்லடா, என்று கூறி
இந்த இனிய வாய்ப்பை வழங்கிய
தலைவர் அவர்களுக்கும் இளம் தலைவர் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி கூறி விடைபெறுகிறேன்… வணக்கம்!’’ என பேசி முடித்தார் ஜோயல்!

அதாவது, பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என்ற வரிசையில் அடுத்து திராவிட இயக்கத்தை வழிநடத்தும் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தை வருங்காலத்தில் வழிநடத்தப்போவதும் உதயநிதிதான் என்ற தொனியில் பேசியிருக்கிறார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal