சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்தன. புதைந்த வீட்டில் சிக்கியிருந்த 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
18 குடும்பத்தைச் சேர்ந்த 47-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும்வெளியாகவில்லை. நிலச்சரிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் (மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை) நிலவி வருகிறது.