அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அயோத்தி ராமர் கோவில் பூஜையில், மோடியின் ‘பிரதமர்’ என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை என கூறியுள்ளார்.