சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார். அண்ணா சாலை 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.