வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எழிலரசன் எம்.எல்.ஏ., அப்துல்லா எம்.பி., எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ.. மேயர் பிரியா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பதை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவில், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாக துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்படத்தக்கது. ஏற்கனவே, வேட்பாளர் தேர்வில் இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal