இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

35 பேர் கொண்ட தேர்தல் குழுவின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் குழுவில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரிஅனந்தன், மணிசங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal