முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக சசிகலா இன்று மாலை கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார். எஸ்டேட் பங்களா முன்பு ஜெயலலிதாவின் சிலையை வைக்க நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க உள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்தனர். 2017-ம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா அங்கு செல்லாமலேயே இருந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு இன்று மாலை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal