முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எல்லோருமே கூட்டணியில் காலகட்டத்துக்கு ஏற்ப முடிவுகளை செயல்படுத்துகிறார்கள். தேர்தலுக்கு ஏற்ப வாக்குகள் மாறுகின்றன. எந்த கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி இருப்பதாக கூற முடியாது. அந்த அந்த கால கட்டத்துக்கு ஏற்ப மக்கள் வாக்களிக்கிறார்கள்.
இப்போது எடப்பாடி பழனிசாமியை மக்கள் நூறு சதவீதம் நம்புகிறார்கள். ஜெயலலிதா இருந்த போது 2014 தேர்தலில் இந்தியாவில் 3-வது பெரிய சக்தியாக அ.தி.மு.க. இருந்தது. அதேபோல் இப்போதும் இந்திய பிரதமரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் அ.தி.மு.க.வை மக்கள் கொண்டு வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதை பெற்று தரக்கூடிய தேர்தல் வியூகத்தையும் அவர் அமைப்பார்.