சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் எங்கும் புத்தாண்டின் முதல் நாளாம் இன்று மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி வருகின்ற சூழலில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், “ இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோவை 5 மீ உயரம் வரை சுனாமி தாக்கும். வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கும் .ஹோன்ஷீ அருகே 13 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal