சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு டிச.26-ந்தேதி இரவு திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயு கசிந்ததை அடுத்து கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலையை மறு தொடக்கம் செய்ய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானதையடுத்து ஆலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை எண்ணூரில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலை மீண்டும் திறக்கப்படவில்லை. மாசு கட்டுப்பாட்டு  வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal