கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal