மறைந்த விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர். இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினால் உடனடியாக தீவுத்திடலுக்கு செல்லுமாறு மக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், முக்கிய நபர்கள், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே என நல்லடக்க நிகழ்வில் அனுமதிக்கப்படுவர். விஜயகாந்த் உடல் நல்லடகத்தின் போது கவர்னர் ஆர்.என்.ரவி வருவார் என கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal