மறைந்த நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தீவுத் திடலில்¢ வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினால், விஜயகாந்த் மறைவு பற்றி பேசிய ஜி.கே.வாசன், ‘‘ ஒரு நல்ல மனிதர் இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள சிறந்த கலைஞர்களில் முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதி பெற்றவராக செயல்பட்டவர்.
சினிமா துறை பல்வேறு சங்கடங்களுக்குள்ளான போனது கடின உழைப்பால் அதனை மீட்ட பெருமை விஜயகாந்திற்கு உண்டு. அதே போல தனக்கென்று தன்னுடைய சிறந்த நடிப்பால் உருவாக்கிய ரசிகர் பட்டாளத்தை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி, ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் உள்ள நகரம் முதல் கிராமம் வரை கட்சியினுடைய கட்டமைப்பை ஏற்படுத்தி, தன்னுடைய தலைமைப் பண்பால் தமிழகத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த பெருமை கேப்டன் விஜயகாந்த்துக்கு உண்டு.
மனித நேயர், கடின உழைப்பாளி, நட்புக்கு இலக்கணமானவர், அன்பு பாராட்டக்கூடியவர் அப்படிப்பட்ட நல்ல தலைவரை தமிழகம் இன்று இழந்திருக்கிறது. மறைந்த மக்கள் தலைவர் அய்யா திரு. மூப்பனார் அவர்களோடு மிகுந்த மரியாதை கொண்ட அன்போடு பழகியவர். விஜயகாந்தின் திருமணமே ஐயா மூப்பனார் அவர்களின் தலைமையில், கலைஞர் நடத்தி வைத்தார்.
மேலும், 2026ம் ஆண்டு தமிழகத்தில் மூன்றாவது அணி கேப்டன் தலைமையில் உருவானது. அப்போது த.மா.கா. என் தலைமையில் இணைந்து செயல்பட்டது. கூட்டணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் கொடுத்த மரியாதையை இந்த நேரத்திலே நினைத்துப் பார்க்கிறேன்’’ என்று விஜயகாந்தின் நினைவலைகள் குறித்து ஜி.கே.வாசன் பகிரிந்துகொண்டார்.