ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார் என நடிகை பேசியிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

ஆந்திராவிலிருந்து வந்தவர் நடிகை கவிதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார், சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தடேபள்ளிகுடேம் பகுதியில் நிடமர்ரு கிராமத்தை சேர்ந்தவர்.இவர் 11 வயது இருக்கும் போதே ஓ மஞ்சு என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தசரதராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கணவர் தசரதராஜையும் மகனையும் கொரோனாவில் இழந்தார் நடிகை கவிதா. இந்த நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நானும் ஜெயசுதாவும் காங்கிரஸுல் சேர்ந்துவிட்டதாக யாரோ சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லிவிட்டனர். எனக்கு அரசியல்ன்னாலே என்னன்னு தெரியாது. ஆனால் ராமாராவ் இருக்கும் போதே தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்துவிட்டார். அதெப்படி காங்கிரஸ் கட்சியில் எப்படி சேர்வார் என கேட்டு சந்திரபாபு நாயுடு என்னை அழைத்து வர சொன்னார். இதையடுத்து என் வீட்டிற்கு நான்கைந்து எம்எல்ஏக்கள் வந்து சந்திரபாபு நாயுடு சந்திக்க வேண்டும் என கூறினர்.

அப்போது கவிதா காங்கிரஸில் சேர்ந்துவிட்டார் என யார் சொன்னது என என் கணவர் கேட்டுள்ளார். ஆனாலும் எம்எல்ஏக்கள் சொன்னதற்காக நான் சந்திரபாபு நாயுடுவை போய் சந்தித்தேன். நான் ஹீரோயினாக சென்னையில் இருந்த போது சந்திரபாபு நாயுடு என் பக்கத்து வீட்டில் இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்பத்திற்கு நல்லுறவு இருந்தது. அப்போது என்னிடம் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி போவீர்கள்? என கேட்டார். உடனே நான் எந்த கட்சியிலும் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என கூறினேன். அவரோ தெலுங்கு தேசம் கட்சியில் நீங்கள் இருக்க வேண்டும். எம்எல்ஏ சீட்டு கொடுக்கிறேன். பெண் பிரபலம் மற்றும் உங்களுடைய சமூகம் சார்ந்தவர்களை நான் ஆதரித்தது போல் இருக்கட்டும் என சொன்னார்.

என் கணவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் கவிதா திறமையானவர், நான் பார்த்துக் கொள்கிறேன் எம்எல்ஏவாக மாற்றுகிறேன் என சொன்னார். அதனால் நான் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தேன். அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தது. நான் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டேன்.

அங்கு வீடு, ஆபிஸ் என பார்த்து எல்லாவற்றுக்கும் பணம் செலவழித்தேன். வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் அங்கு வந்த விசாகப்பட்டினம் எம்பி, சந்திரபாபு நாயுடுவிடம் ஏதோ சொன்னார். உடனே நாயுடு என்னை காத்திருக்குமாறு கூறினார். நான் இருக்க மாட்டேன், நான் போகிறேன், எனக்கு நீங்கள் சீட்டு தர மாட்டீர்கள் என கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இதையடுத்து நான் 2018ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தேன். பிரதமர் மோடி மீதான ஈர்ப்பால் அந்த கட்சிக்கு மறைமுக ஆதரவு தர நினைத்தேன். அங்கு போட்டியிடலாம் விரும்பவில்லை என நடிகை கவிதா தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal