கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த கனமழையால் பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது சொந்த செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கியது, பாதிக்கப்பட்டவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தர்மபுரமடம் ஊராட்சி அழகப்பபுரம், நீலமேக புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கருத்த பிள்ளையூர் மற்றும் முதலியார் பட்டியில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் தர்மபுரமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம், முதலியார் பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் முகைதீன் பீவி அசன், ஒன்றிய கவுன்சிலர் ஜஹாங்கீர் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இல்லாத நிலையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருப்பது அவரது மனிதநேயத்தைக் காட்டுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal