தனது காதலன் திருநங்கை என்பதை உணர்ந்த காதலி விலகியதால், ஆத்திரத்தில் அவரை துண்டு துண்டாக வெற்றி ‘காதலன்’ கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் இதை அவ்வழியே போவோர் வருவோர் பார்த்தனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிரேதத்தை கைப்பற்றிய போது அதிர்ந்தனர்.

அந்த சடலத்தின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் தடயங்கள் இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். அப்போது அந்த சடலத்தின் அருகே கைபேசி இருந்தது.

உடனே அதை கைப்பற்றிய போலீஸார் அதிலிருந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெண் இறந்தது குறித்து தெரிவித்தனர். அவர் பெருங்குடியில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர் மதுரை தல்லாங்குளத்தை சேர்ந்த 28 வயது நந்தினி என தெரியவந்தது. அவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பதை போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெண்ணின் செல்போனில் யாரிடம் அவர் கடைசியாக பேசினார் என்பதை விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு இளைஞருடன் அவர் பேசியதை கண்டுபிடித்தனர். அந்த இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் வெற்றி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் நேற்றைய தினம் அவருடைய பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன் வெற்றி, அவரை கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி அவரை அழைத்து சென்ற வெற்றி, இரவு நேரத்தில் கேளம்பாக்கம் அருகே நந்தினியை சங்கிலியால் கை, கால்களை கட்டி அவரை அறுத்து கொண்டு வந்திருந்த பெட்ரோல் மூலம் கொடூரமாக கொன்றுள்ளார்.

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய முன்னாள் காதலன் வெற்றியை தாழம்பூர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காதலித்து ஏமாற்றியதால் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. மேலும் காதலித்து வந்த வெற்றி திருநங்கை என தெரிந்ததால் அவரிடம் இருந்து நந்தினி விலகியுள்ளார். இதையடுத்து நந்தினி வேறொரு இளைஞரை காதலிப்பதை அறிந்ததால் வெற்றி அந்த பெண்ணை திட்டம் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal