‘உன் அப்பன் வீட்டு பணத்தையா கேட்டோம்..!’ என உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்ததற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னையைத் தொடர்ந்து தென்மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது கனமழை. கடும் வெள்ள பாதிப்பினால் மத்திய அரசிடம் உதவி கோரியது மாநில அரசு. இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை… எங்களுடைய வரிப்பணத்தைதான் கேட்கிறோம்…’ என்ற தொணியில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில்தான் உதயநிதியின் பேச்சு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘அவங்க பாஷை எப்போதும் அப்படித்தான்… சனாதன தர்மம் குறித்து பேசும்போது, ‘நாங்க அழிக்க வர்ல… ஒழிக்க வந்துருக்கோம்..!ம்னு பேசுனாரு உதயநிதி! இப்படி எல்லாம் பேசுறவங்க, அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னைக்கு பதவி யை அனுபவிச்சுக்கிட்டு இருக்காறா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு உரிய முக்கியத்துவத்தை நாங்கள் கொடுக்கிறோம்.

இந்த அப்பன் வீடு… உங்க ஆத்தாவா…? இந்தப் பேச்சு எல்லாம் அரசியல்ல நல்லதாங்க..! அரசியல்ல இன்னும் முன்னுக்கு வரனும்னு உதயநிதி ஆசைப்படுறாரு இல்லையா? அந்தக் குடும்பமும் ஆசைப்படுது இல்லையா? பேசுற பாஷை, மொழி… அவங்க தாத்தா எப்பேற்பட்ட தமிழ் அறிஞர்? அதனால நம்ம நாக்குல பதவிக்கு ஏத்த அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரனும்!

இதனை நான் பொதுப்படையாக சொல்கிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது! இதற்கு முன்னாடி ஒரு உதாரணம் (சனாதனம்)பார்த்தோம்! இப்ப ஒரு உதாரணம் பார்க்கிறோம். மக்கள் மழைவெள்ளத்தில் அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கும் போது, மத்திய அரசு முன்கூட்டியே 9000 கோடி பணத்தை ரிலீஸ் செய்தது. அதை நான் உங்க அப்பன் வீட்டு பணமோ, எங்க அப்பன் வீட்டு பணமான்னு சொல்ல மாட்டேன்!

எனவே, தயவு பண்ணி அடுத்த முறை அவரை (உதயநிதி) பார்த்தீங்கன்னா? அந்தம்மா அப்படி சொன்னாங்கன்னு கேளுங்க! மத்திய அரசு குழு நேரில் வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க… உங்க அப்பாவும் போய் பிரதமரை பார்த்துட்டு வந்துருங்காங்க…’’ கொஞ்சம் அடக்கிப் பேசுங்கன்னு மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal