டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெறு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.