தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான தூத்துக்குடி எஸ்.ஜோயலின் தாயார் நேற்று இயற்கை எய்தினார்.

தி.மு.க. இளைஞரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ‘குட்புக்கில்’ இடம்பெற்று மீண்டும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பதவியை பெற்றவர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்! இவரது தாயார் எஸ்தர் செல்வம் நேற்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் அமைச்சரும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘தி.மு.க. இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் சகோதரர் எஸ்.ஜோயல் அவர்களின் தாயார் எஸ்தர் செல்வம் அவர்கள் உடல்நலக் குறைவார் நேற்று மரணம் அடைந்தார்.

இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஜோயலின் இல்லத்திற்கு சென்று அவரது தாயாரின் திருவுடலுக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.

அன்னையாரை இழந்து தவிக்கும் ஜோயல் மற்றும் அவரது குடும்பத்தார் – நண்பர்களுக்கு ஆறுதலை தெரிவித்தோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்.ஜோயலுக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

தூத்துக்குடி எஸ்.ஜோயலின் தாயார் மறைவு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் உடன் பிறப்புக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal