நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18- ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal