ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான மருது அழகுராஜ் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள், அறிக்கைகள் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிரமர் மோடி மற்றும் அமித்ஷாவின் முகவரிக்கு என மருது அழகுராஜ் வலைதளத்தில்,

‘‘டி.டி.வி. தினகரன், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பச்சமுத்து, சரத்குமார் என்னும் இந்த கதம்ப மலர்களை எல்லாம்…

ஒன்றாகக் கோர்த்து வெற்றித் தோரண மாக்கும் முதிர்ச்சியும், அம்மாவிடம் பெற்ற அரசியல் ஞானமும், தேர்தல் அனுபவமும்…

ஓ.பி.எஸ் என்கிற ஒருவருக்கே உண்டு என்பதை உணர்ந்து காலத்தே களத்தை பாஜக தயார்படுத்தினால்…

1998- ல் அதிமுக -பாஜக ஈட்டிய அதே அமோக அறுவடையை வரவிருக்கும்2024 நாடாளுமன்ற தேர்தலிலும் மகசூலாக்க முடியும் என்பது நிச்சயம்..!’’என பதிவிட்டிருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மருது அழகுராஜ் சொல்வது போல் கூட்டணி அமைந்துவிடுமா? எனற பதற்றத்தில் எடப்பாடி தரப்பு இருப்பதாக சொல்கிறார்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal