கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- உலகெங்கும் அன்பை போதித்து அன்பே பிரதானம் என்றுரைத்த இறைமகனாம் அருள்நாதர் இயேசு கிறிஸ்து அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் நார்த்பரேட் மாண்ட்போர்டு பள்ளி வளாகத்தில் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.