பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையின் உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டுவீச்சில் ஈடுபட்ட 4 பேரும் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர், பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என எம்.பி.கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நடந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இதுவரையில் இல்லாத வகையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி. தவறிழைத்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal